பொதுச் சுவரை பாழ்படுத்திய புகார்:டில்லி காங்., தலைவர் விடுதலை

புதுடில்லி:பொதுச் சுவரில், தீபாவளி வாழ்த்து தெரிவித்து நோட்டீஸ் ஒட்டியதாக, டில்லி பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி செயலர் விஜேந்தர் ஜிண்டல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.டில்லி பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி செயலர் விஜேந்தர் ஜிண்டால். கடந்த 2008ம் ஆண்டு, டில்லி சட்டசபை தேர்தலின் போது, பிரசாந்த் விகாரில் உள்ள பொதுச் சுவரில், தீபாவளி வாழ்த்து தெரிவித்து, இவரது போட்டோ கொண்ட நோட்டீஸ் மற்றும் பேனர் தொங்க விட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.பொதுச் சுவரை பாழ்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், விஜேந்தர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 2008, அக்டோபரில் கைது செய்யப்பட்ட விஜேந்தர் பின்னர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால், இதுதொடர்பான வழக்கு டில்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது வந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று, இந்த வழக்கில், கோர்ட் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், "வழக்கு தொடுத்தவர்கள், இந்த வழக்கில் போதிய ஆதாரங்களை காட்டவில்லை. குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், பேனர் அல்லது நோட்டீசை, கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. அந்த நோட்டீசில் இடம் பெற்றுள்ள படம், குற்றம்சாட்டப்பட்டவர் கட்டாயத்தின் பேரில் அச்சிடப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. போட்டோ இடம் பெற்றதால், விஜேந்தர் மீது குற்றம்சாட்ட முடியாது. எந்தவித சாட்சியங்கள் கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. சாட்சியத்துடன் நிரூபிக்க போலீசார் போதிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஆதலால், இந்த வழக்கில் இருந்து விஜேந்தர் விடுவிக்கப்படுகிறார்' என்று, தெரிவித்தது.   ( தினமலர் )

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை