Posts

Showing posts from March, 2017

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்படுகிறார் . ...

ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தங்களுடைய கட்சி எம். எல். ஏக்களிடம் தனது நண்பர்கள் மற்றும் கட்சியினர் மூலம் தொடர்பு கொண்டு எல்லோரு ஓபிஎஸ் அணிக்கு செல்லுங்கள் என்று கூறி வருகிறார். எப்படியாவது எங்கள் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்' என்று கூறியுள்ளார தினகரனின் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறிய மு. க. ஸ்டாலின், 'தினகரன் தனது சுய விளம்பரத்திற்காக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை' என்று கூறியுள்ளார்..

டிரைவிங் லைசென்சுக்கு ஆதார் எண்னை கட்டாயமாகிறது

புதுடில்லி : டிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போதும், புதுப்பிக்கும் போதும் ஆதார் எண்ணை கேட்டு வாங்க மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரே நபர் பல இடங்களில் லைசென்சு வாங்குவது, போக்குவரத்து குற்றங்களிலிருந்து தப்பிக்க போலி லைசென்ஸ் வாங்குவதை தடுக்க முடியும். இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேட்டாபேஸ்: இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ் வழங்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும், வெவ்வேறு மாநிலங்களில்,வெவ்வேறு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூலம் பல லைசென்ஸ் வாங்குவதை தடுக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் அடையாளத்தை கண்டுபிடிக்க ஆதார் மட்டுமே போதுமான அடையாளமாக இருக்கும். ஆதார் இல்லாதவர்கள் வேறு சில சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அளிக்கும் சான்றுகளை அதிகாரிகள் பதிவு செய்ய தேவையான மாற்றங்ளை மத்திய அரசு செய்து வருகிறது. இத

இளையராஜாவுக்கு கங்கை அமரன் கண்டனம்

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது ‘எஸ்.பி.பி.-50’ என்ற பெயரில் வெளி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இந்த இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் இசையில் தான் பாடிய பாடல்களையும் பாடி வருகிறார். இது தொடர்பாக எஸ். பி.பாலசுப்பிரமணியத்துக் கும், அவருடன் பாடும் சித்ராவுக்கும் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘நான் இசை யமைத்த பாடல்களை மேடைக் கச்சேரிகளில் பாடி னால் காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவேன்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எஸ்.பி.பால சுப்பிரமணியம் தனது ‘பேஸ்புக்‘ பககத்தில் பதில் அளித்தார். அதில், “காப் புரிமை சட்டம் பற்றி எனக்கு விழிப்புணர்வு கிடையாது. ஆனாலும் அந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.  நானும், எங்கள் குழுவின ரும் இனி இளையராஜா பாடல்களை மேடைகளில் பாட மாட்டோம். இளைய ராஜா தவிர பல இசையமைப் பாளர்களின் இசையில் நான் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனி வரும் கச்சேரிகளில் பாடுவேன்” என்றார். இந்த நிலையில் தான் இசையமைத்த பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மேடைகளில்

நடிகர் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை வழியே அழிப்பு

Image
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கோரி கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்துள்ளார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் நடிகர் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை வழியே அழிக்கப்பட்டுள்ளன என தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதுரை மருத்துவமனை டீன் முன்னிலையில் 2 மருத்துவர்கள் இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து விரிவான விசாரணையை வரும் 27ந்தேதிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது.

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் குறித்து முடிவு செய்ய மார்ச் 23ல் உயர்நிலைக் கூட்டம் கூடுகிறது

Image
புதுடெல்லி, தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.குறிப்பாக காவிரி பாசன விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. பயிர்கள் காய்ந்து போனதை கண்டு மனம் உடைந்த விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரண நிதி, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடுப்பில் இலை தழைகளை கட்டிக்கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அவர்களை அரசியல் கட்சித்தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளநிலைய