இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல், பெட்ரோல் விலை லீட்டருக்கு 5 ரூபாய்க்கு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்த்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லீட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை திடீரென லீட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்வடைவது இதுவே முதல் முறை ஆகும். பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்துவதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. எனினும் தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட சபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்ட சபை தேர்தல் முடிவுகளும் வெளிவந்துள்ளதால் இவ்விலையேற்றம் அமலுக்கு வருகிறது. இதனால், டீசல் விலை லீட்டருக்கு ரூ.4 இனாலும் , எரிவாயு விலை ரூ.20-25 இனாலும் உயர்த்தபடவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தியன் ஆயில் கார்பரேஷன் விற்பனையில், டெல்லியில் இதுவரை லீட்டருக்கு ரூ 58.37 ஆக இருந்து வந்த பெற்றோல் விலை நாளை முதல் லீட்டருக்கு ...
Comments
Post a Comment