துருக்கியில் நிலநடுக்கம்: 3 பேர் பலி
அன்கரா, மே.20-
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள சிமாவ் நகரத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். 79 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜன்னல் மற்றும் பால்கனியில் இருந்து குதித்தவர்கள் ஆவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment