நெய்வேலியில், ரூ.5,907 கோடி மதிப்பிலான 2 அனல்மின் திட்டங்கள்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்


புதுடெல்லி, மே.19-
நெய்வேலியில் கூடுதல் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, மத்திய அரசுக்கு தென்மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்தது. அப்போது, பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி, நெய்வேலியில் புதிதாக 2 அனல் மின் திட்டங்களை நிறைவேற்றுவது என்றும், இந்த திட்டத்துக்கு ரூ.5,907 கோடி செலவு செய்வது என்றும், மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேறும் போது அங்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தென்மாநிலங்களின் மின் தேவை பூர்த்தியாகும்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது