அம்பேத்கர் பெயர்: பால் தாக்கரே கருத்து

மும்பை:மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு ஆட்சேபனை இல்லை என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, "மராத்வாடா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து, சிவசேனா தலைவர் பால் தாக்கரே தனது கட்சிப் பத்திரிகையான "சாம்னா'வில், பெயர் மாற்றத்திற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு பாபா சாகேப் அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை. ஆனால், அம்பேத்கர் பெயருடன் மராத்வாடா என்ற பெயரும் நீடிக்க வேண்டும். அதாவது, "பாபா சாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக் கழகம்' என்று அழைக்கப்பட வேண்டும்.கடந்த 1990ம் ஆண்டுகளில் இந்த ஆலோசனையை நான் தெரிவித்திருந்தேன். இந்த ஆலோசனைக்காக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராட்டு தெரிவித்தன. மராத்வாடா என்பது, சுதந்திரப் போராட்டம் நடத்திய மக்களின் வரலாற்றை விளக்கும் சொல் என்பதால் அது நீடிக்க வேண்டும்.இவ்வாறு பால் தாக்கரே கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை