ரஜினி உடல் நலம் குறித்து ஜெயலலிதா விசாரித்தார்
சென்னை, மே.20-
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13-ந் தேதி, போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் ஜெயலலிதாவிடம் லதா விளக்கமாக எடுத்துரைத்தார். ரஜினிகாந்த் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக ஜெயலலிதா தெரிவித்தார்.
Comments
Post a Comment