ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி: கைது செய்ய கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, மே.20-
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்காக நாளை காலை 10 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறினார்.
( தினத்தந்தி )
Comments
Post a Comment