ஈராக்கில் தீவிரவாதிகள் தாக்குதலில் 25 பேர் பலி, 79 பேர் காயம்
பாக்தாத், மே.19-
ஈராக்கின் வடக்கு பிரதேசத்தில் உள்ள கிர்குக் நகரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் குண்டு வெடித்தது. போலீசார் அந்த இடத்துக்கு ஓடிவந்து பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் இருந்து குண்டு வெடித்தது. ஒரு மணி நேரத்துக்கு பிறகு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரின் பாதுகாவலரின் வாகனத்துக்கு அருகில் இன்னொரு குண்டு வெடித்தது. இந்த 3 குண்டு வெடிப்புகளில் மொத்தம் 25 பேர் பலியானார்கள். 79 பேர் காயம் அடைந்தனர்.
Comments
Post a Comment