Posts

Showing posts from January, 2017

மத்திய பிரதேசத்தில் எஸ்.பி.ஐ. வங்கியில், பணம் எடுத்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்கிறார் தலைமையகம் விழாக் கோலம்

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்தனர். அந்த தீர்மான நகலை முதல் &அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தம்பித்துரை, பொன்னையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கி பொறுப்பேற்க சம்மதம் கேட்டனர். அவர்களின் கோரிக் கையை ஏற்று பொதுச்செயலாளராக சசிகலா சம்மதம் தெரிவித்தார்.நேற்று சசிகலா மெரீனா கடற்கரை சென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.,  அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்து 12 மணிக்கு பதவியேற்க உள்ளார். முறைப்படி பொதுச் செயலாளர் பணியினை தொடங்க உள்ள சசிகலாவை வரவேற்க தலைமையகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. சசிகலாவை வாழ்த்தி வரவேற்கும்பேனர்கள் லாயிட்ஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் ஜெயலலிதாவுடன் சசிகலா இருக்கும் பிளக்ஸ் பேனர்கள் அடுக்கப்பட்டுள்ளன. சசிகலாவின் புகழ்பாடும் "தியாகத் தாயே" "சின்னம்மா வருக" போன்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் சுவரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பகுதியில் காவல்துறையின் கெடுபிடி தீவிரமடைந்துள்ளன. நேற்றிரவ

பிரான்கோயிஸ் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கிரேக்க தூதர் கிரியகோஸ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேசிலில் கிரேக்க தூதராக பணியாற்றியவர் கிரியகோஸ் அமிரிதிஸ் (59), இவர் பிரேசிலியாவில் உள்ள தூதரக அலுவலக குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டை கொண்டாட ரியோ டிஜெனிரோவுக்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் புறநகரான நோவா இருவாச்சு என்ற இடத்தில் தங்கியிருந்த போது திடீரென மாயமாகி விட்டார்.  அவரை பணத்துக்காக யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. எனவே அவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். ஆனால் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒரு பாலத்துக்கு கீழ் காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடல் கரிக்கட்டை யாக கிடந்தது. தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் கிரேக்க தூதர் கிரியகோஸ் அமிரிதிஸ் எரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.  அதை தொடர்ந்து கொலையாளி யார்? ஏன் அவர் கொலை செய்யப்பட் டார் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப் பட்டது. அதில் அவரை மனைவி பிரான்கோயிஸ் (40) கொலை செய்தது தெரிய வந்தது.இவர் பிரேசிலை சேர்ந்தவர். இவர்களுக்கு 10 வயதில் மகள் இருக்கிறாள். இந்த நிலையில் பிரான் கோயிசுக்கும், பிரேசிலை சேர்ந்த போலீஸ் அ

அகிலேஷ் யாதவ் முலாயம் சிங்- தனித்தனியாக ஆலோசனை கூட்டம்

உத்தரபிரதேசத்தில் ஆளும்  சமாஜ்வாடி கட்சியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், சமாஜ்வாடியில்  அதிகாரத்தை கைப்பற்றுவதில் அக்கட்சி யின் நிறுவனரான முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், முதல்-மந்திரியுமான அகிலேஷ்    யாதவுக்கும் மோதல் உருவானது. முலாயம்சிங்குக்கு ஆதர வாக அவரது தம்பியும், மாநில சமாஜ்வாடி தலைவரு மான சிவபால் யாதவ் வலது கரமாக இருந்து செயல்பட்டு வருகிறார். அகிலேஷ் யாத வுக்கு ஆதரவாக முலாயம் சிங்கின் சித்தப்பா மகனும் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான ராம் கோபால் யாதவ் இருக் கிறார். இதனால் சமாஜ்வாடி யில் மூத்த தலைவர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந் துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே நீருபூத்த நெருப்பாக இருந்து வந்த மோதல் முலாயம்சிங் யாதவ் 325 பேர் கொண்ட வேட் பாளர் பட்டியலை வெளி யிட்டதும் பூதாகரமாக வெடித்தது. அந்த வேட்பா ளர் பட்டியலை ஏற்காத அகிலேஷ் யாதவ் நேற்று முன்தினம் இரவு 235 தொகுதிகளுக்கான போட்டி வேட்பாளர்  பட்டியலை வெளியிட்டார்.இதனால் கடும் அதிருப்தி அடைந்த முலாயம்சிங் யாதவ் நேற்றிரவு முதல்-மந்திரி அகிலேஷ்