தேசிய விருதுகள் அறிவிப்பு: தனுஷ், சரண்யா, வெற்றிமாறனுக்கு விருது
புதுடெல்லி, மே.19-
58-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆடுகளம் படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. ஆடுகளம் இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிறந்த திரைக்கதை, இயக்குனருக்கான விருது வழங்கப்படுகிறது. சிறந்த எடிட்டிங்குக்கான விருதும் ஆடுகளம் படத்துக்காக கிஷோருக்குக் கிடைத்துள்ளது. அந்த படத்தின் நடன இயக்குனர் தினேஷ் குமாருக்கு விருது கிடைத்துள்ளது. 'சிவராம் கரந்த்' விருதையும் ஆடுகளம் பெற்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த நடிகைக்கான விருது மிதாலே ஜக்தாப் வரதாருக்கும் கிடைத்துள்ளது. சிறந்த பிராந்திய மொழி தமிழ் படமாக தென்மேற்கு பருவக்காற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தின் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த துணை நடிகருக்கான விருதை மைனா படத்தில் நடித்த தம்பி ராமையா பெறுகிறார். ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்துக்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட், தயாரிப்பு வடிவமைப்பு பிரிவில் விருது் கிடைத்துள்ளது. சிறந்த பொழுதுபோக்கு படமாக சல்மான்கானின் 'தபாங்' தேர்வாகி உள்ளது.
Comments
Post a Comment