தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி பதவி ஏற்றார்
சென்னை,மே.16-
தமிழக அரசின் தலைமை செயலாளராக எஸ்.மாலதி பணியாற்றி வந்தார். முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதும் அதிகாரிகள் மட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாலதி தலைமை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, புள்ளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவருக்குப்பதிலாக தேபேந்திரநாத் சாரங்கி நியமிக்கப்பட்டார். அவர் இதுவரை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக (டிட்கோ) தலைவராக இருந்தார். அரசு உத்தரவுப்படி இன்று உடனடியாக அவர் தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவிஏற்றார்.
Comments
Post a Comment