படித்த ஏழைப்பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்

சென்னை, மே.16-
முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு இன்று மாலை வந்தார். பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது பணிகளை தொடங்கினார். அதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல்-அமைச்சர் அறைக்கு வந்து முதலில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டேன். படித்த ஏழைப்பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம். பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண்களின் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம். பெண்களின் ஓய்வு ஊதியம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு. மீன்பிடி தடைகால உதவி பணம் ரூ.1,000-ல் இருந்து இரண்டாயிரம் ஆக உயர்வு. அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு 6 மாதமாக உயர்வு உள்பட 7 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது