Posts

Showing posts from May, 2011

சீனா ஏவுகணை சோதனை நடத்தியது

பீஜிங், மே.20- சீனா வனத்தில் இருந்து வானத்தில் சீறி பாயும் அடுத்த தலைமுறை ஏவுகணையை தயாரித்து உள்ளது. அதை இன்று சோதித்து பார்த்தது. இதை ரகசிய ஆயுதம் என்று சீனா கூறுகிறது. வெளிநாட்டு உதவி இல்லாமலும் வெளிநாட்டு தொழில் நுட்ப உதவி இல்லாமலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை இது என்று சீனா கூறி உள்ளது. வானப்பரப்பில் மேலாதிக்கத்தை எட்டுவதற்கு இந்த ஏவுகணை உதவும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஏவுகணையை ராணுவத்துக்கும் நாட்டுக்கும் கிடைத்த இன்னொரு துருப்புச்சீட்டு என்று சீன அரசாங்கம் கூறி உள்ளது.

நிர்வாக வசதிக்காகவே புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயல்பட முடிவு: ஜெயலலிதா

சென்னை, மே.20- "புதிய தலைமைச்செயலக கட்டிடப்பணிகள் முடிவடையாத நிலையில், நிர்வாக வசதியைக் கருதி புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தே செயல்பட முடிவெடுத்துள்ளேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எந்த நடவடிக்கையையும் நான் எப்போதும் எடுத்ததில்லை'' என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார். ( தினத்தந்தி )

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி: கைது செய்ய கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, மே.20- ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்காக நாளை காலை 10 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறினார். ( தினத்தந்தி )

ரஜினி உடல் நலம் குறித்து ஜெயலலிதா விசாரித்தார்

சென்னை, மே.20- நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13-ந் தேதி, போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் ஜெயலலிதாவிடம் லதா விளக்கமாக எடுத்துரைத்தார். ரஜினிகாந்த் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக ஜெயலலிதா தெரிவித்தார்.

துருக்கியில் நிலநடுக்கம்: 3 பேர் பலி

அன்கரா, மே.20- துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள சிமாவ் நகரத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். 79 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜன்னல் மற்றும் பால்கனியில் இருந்து குதித்தவர்கள் ஆவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் அமெரிக்க தூதரக வாகனம் மீது தலீபான்கள் தாக்குதல்: ஒருவர் பலி

பெஷாவர், மே.21- பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத் தலைநகர் பெஷாவரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பயணம் செய்த வாகனம் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் அந்த நகரில் உள்ள பிரதான சாலையில் நடந்தது. அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் இந்த தாக்குதலில் பலியானார். மற்றும் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் வெளிநாட்டுக்காரர்கள் ஆவார்கள். ( தினத்தந்தி )

ஜப்பானில் நிலநடுக்கம்

டோக்கியோ, மே.20- ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் கிழக்கு ஜப்பானின் சுற்றுப்புற பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை. ( தினத்தந்தி  )

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

மும்பை, மே.20- மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ` 44.94 ஆக இருந்தது. ( தினத்தந்தி )

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மோதல் முற்றுகிறது

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும், தயாரிப்பாளர்களும் போட்டி, போட்டு எதிர்ப்பு கூட்டம் நடத்துவதால் தயாரிப்பாளர்களுக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் முற்றிவருகிறது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த ராம.நாராயணன், பதவியை ராஜினாமா செய்ததும், துணைத் தலைவராக இருந்த திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சங்கத்தின் செயற்குழு மூலம் தலைவராக்கப்பட்டார். "முறையாக தேர்தல் நடத்தித் தான், தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.  குறுக்கு வழியில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவரானது சங்க விதிகளின் படி தவறானது. ராம.நாராயணன், சங்கத்தில் தலைவராக இருந்த போது, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த ஊழலை மறைக்கவே எஸ்.ஏ.சந்திரசேகர் சங்கத் தலைவராக்கப்பட்டுள்ளார்  என, பல தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சங்கத்திற்கு முறையாக தேர்தல் நடத்தி, தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., கேயார் மற்றும் 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், கடந்த 14ம் தேதி சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் ...

அம்பேத்கர் பெயர்: பால் தாக்கரே கருத்து

மும்பை:மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு ஆட்சேபனை இல்லை என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, "மராத்வாடா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து, சிவசேனா தலைவர் பால் தாக்கரே தனது கட்சிப் பத்திரிகையான "சாம்னா'வில், பெயர் மாற்றத்திற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு பாபா சாகேப் அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை. ஆனால், அம்பேத்கர் பெயருடன் மராத்வாடா என்ற பெயரும் நீடிக்க வேண்டும். அதாவது, "பாபா சாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக் கழகம்' என்று அழைக்கப்பட வேண்டும்.கடந்த 1990ம் ஆண்டுகளில் இந்த ஆலோசனையை நான் தெரிவித்திருந்தேன். இந்த ஆலோசனைக்காக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராட்டு தெரிவித்தன. மராத்வாடா என்பது, சுதந்திரப் போராட்டம் நடத்திய மக்களின் வரலாற்றை விளக்கும் சொல் என்பதால் அது நீடிக்க வேண்டும்.இவ்வாறு பால் தாக்கரே க...

பொதுச் சுவரை பாழ்படுத்திய புகார்:டில்லி காங்., தலைவர் விடுதலை

புதுடில்லி:பொதுச் சுவரில், தீபாவளி வாழ்த்து தெரிவித்து நோட்டீஸ் ஒட்டியதாக, டில்லி பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி செயலர் விஜேந்தர் ஜிண்டல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.டில்லி பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி செயலர் விஜேந்தர் ஜிண்டால். கடந்த 2008ம் ஆண்டு, டில்லி சட்டசபை தேர்தலின் போது, பிரசாந்த் விகாரில் உள்ள பொதுச் சுவரில், தீபாவளி வாழ்த்து தெரிவித்து, இவரது போட்டோ கொண்ட நோட்டீஸ் மற்றும் பேனர் தொங்க விட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.பொதுச் சுவரை பாழ்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், விஜேந்தர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 2008, அக்டோபரில் கைது செய்யப்பட்ட விஜேந்தர் பின்னர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால், இதுதொடர்பான வழக்கு டில்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று, இந்த வழக்கில், கோர்ட் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், "வழக்கு தொடுத்தவர்கள், இந்த வழக்கில் போதிய ஆதாரங்களை காட்டவில்லை. குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், பேனர் அல்லது நோட்டீ...

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூடுகிறது; ஆரவாரம் - சலசலப்புக்கு இடமிருக்காது

சென்னை: புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் முதல் சட்டசபை கூட்டம் வரும் 23 ம் தேதி கூடுகிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இதற்கான ஏற்பாடுகள் தடல், புடலாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 3 வது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவின் புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆகும். இது குறித்து சட்டசபை செயலர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 23 ம் தேதி மதியம் 12. 30க்கு சட்டசபை கூடுகிறது. இந்நாளில் எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பர். தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்படும் பின்னர் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு சபாநாயகர் , துணைசபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படும். ஜூன் 3 ம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரவாரம், சலசலப்புக்கு இடமில்லை:  இந்த சட்டசபை கூட்டத்தில் பெரும் ஆரவாரம், சலசலப்பு எதுவும் இருக்காது காரணம் அ.தி.மு.க- தே.மு.தி.க., இடது சாரி கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் எதிர்ப்பலைகள் இருக்க வாய்ப்பில்லை. சர்கஸ் கூடாரம் என ஜெ.,வால் வர்ணிப்பு:  ஓமந்தூரார் தோட்டத்தில் பல கோடி செலவில் கட்டப...

நெய்வேலியில், ரூ.5,907 கோடி மதிப்பிலான 2 அனல்மின் திட்டங்கள்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, மே.19- நெய்வேலியில் கூடுதல் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, மத்திய அரசுக்கு தென்மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்தது. அப்போது, பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி, நெய்வேலியில் புதிதாக 2 அனல் மின் திட்டங்களை நிறைவேற்றுவது என்றும், இந்த திட்டத்துக்கு ரூ.5,907 கோடி செலவு செய்வது என்றும், மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேறும் போது அங்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தென்மாநிலங்களின் மின் தேவை பூர்த்தியாகும்.

ஈராக்கில் தீவிரவாதிகள் தாக்குதலில் 25 பேர் பலி, 79 பேர் காயம்

பாக்தாத், மே.19- ஈராக்கின் வடக்கு பிரதேசத்தில் உள்ள கிர்குக் நகரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் குண்டு வெடித்தது. போலீசார் அந்த இடத்துக்கு ஓடிவந்து பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் இருந்து குண்டு வெடித்தது. ஒரு மணி நேரத்துக்கு பிறகு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரின் பாதுகாவலரின் வாகனத்துக்கு அருகில் இன்னொரு குண்டு வெடித்தது. இந்த 3 குண்டு வெடிப்புகளில் மொத்தம் 25 பேர் பலியானார்கள். 79 பேர் காயம் அடைந்தனர்.

தேசிய விருதுகள் அறிவிப்பு: தனுஷ், சரண்யா, வெற்றிமாறனுக்கு விருது

Image
புதுடெல்லி, மே.19- 58-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆடுகளம் படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. ஆடுகளம் இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிறந்த திரைக்கதை, இயக்குனருக்கான விருது வழங்கப்படுகிறது. சிறந்த எடிட்டிங்குக்கான விருதும் ஆடுகளம் படத்துக்காக கிஷோருக்குக் கிடைத்துள்ளது. அந்த படத்தின் நடன இயக்குனர் தினேஷ் குமாருக்கு விருது கிடைத்துள்ளது. 'சிவராம் கரந்த்' விருதையும் ஆடுகளம் பெற்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த நடிகைக்கான விருது மிதாலே ஜக்தாப் வரதாருக்கும் கிடைத்துள்ளது. சிறந்த பிராந்திய மொழி தமிழ் படமாக தென்மேற்கு பருவக்காற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தின் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த துணை நடிகருக்கான விருதை மைனா படத்தில் நடித்த தம்பி ராமையா பெறுகிறார். ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்துக்கு சிறந்த ஸ்பெஷ...

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி பதவி ஏற்றார்

சென்னை,மே.16- தமிழக அரசின் தலைமை செயலாளராக எஸ்.மாலதி பணியாற்றி வந்தார். முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதும் அதிகாரிகள் மட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாலதி தலைமை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, புள்ளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவருக்குப்பதிலாக தேபேந்திரநாத் சாரங்கி நியமிக்கப்பட்டார். அவர் இதுவரை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக (டிட்கோ) தலைவராக இருந்தார். அரசு உத்தரவுப்படி இன்று உடனடியாக அவர் தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவிஏற்றார்.

படித்த ஏழைப்பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்

சென்னை, மே.16- முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு இன்று மாலை வந்தார். பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது பணிகளை தொடங்கினார். அதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல்-அமைச்சர் அறைக்கு வந்து முதலில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டேன். படித்த ஏழைப்பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம். பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண்களின் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம். பெண்களின் ஓய்வு ஊதியம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு. மீன்பிடி தடைகால உதவி பணம் ரூ.1,000-ல் இருந்து இரண்டாயிரம் ஆக உயர்வு. அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு 6 மாதமாக உயர்வு உள்பட 7 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

Image
இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல், பெட்ரோல் விலை லீட்டருக்கு 5 ரூபாய்க்கு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்த்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லீட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை திடீரென லீட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்வடைவது இதுவே முதல் முறை ஆகும். பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்துவதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. எனினும் தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட சபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்ட சபை தேர்தல் முடிவுகளும் வெளிவந்துள்ளதால் இவ்விலையேற்றம் அமலுக்கு வருகிறது. இதனால், டீசல் விலை லீட்டருக்கு ரூ.4 இனாலும் , எரிவாயு விலை ரூ.20-25 இனாலும் உயர்த்தபடவிருப்பது குறிப்பிடத்தக்கது.  இதையடுத்து இந்தியன் ஆயில் கார்பரேஷன் விற்பனையில், டெல்லியில் இதுவரை லீட்டருக்கு ரூ 58.37 ஆக இருந்து வந்த பெற்றோல் விலை நாளை முதல் லீட்டருக்கு ...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டெக்கான் சார்ஜர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை, மே.14- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்வு

சென்னை, மே. 14- தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவராக இருந்த ராம.நாராயணனும், செயலாளராக பணியாற்றி வந்த சிவசக்தி பாண்டியனும் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர்களின் ராஜினாமாவை சங்கத்தின் செயற்குழு ஏற்றுக்கொண்டது. சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.