Posts

Showing posts from 2016

ரஷ்ய விமானம் கடலில் விழுந்து விபத்து: 91 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான விமானம் கருங்கடலில் விழுந்ததில் 91 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரஷ்யாவின் சோச்சி என்ற நகரில் கிளம்பிய, டியு - 152 ரக விமானத்தில் 83 யபணிகளும், விமான படையை சேர்ந்த 8 வீரர்களும் இருந்துள்ளனர். இந்த விமானம் சிரியாவின் லடாகியா என்ற நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், ரேடார் கருவியில் உள்ள சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தை முழுமையாக தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் கருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தின் உதிரி பாகங்களும், உடல்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய மீடியாக்கள் கூறியுள்ளன.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்: சிகிச்சை பலன் இன்றி உயிர் பிரிந்தது

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். திடீர் மாரடைப்பு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 19-ந் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதாவின் இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழந்ததால் அவற்றை இயங்கச் செய்யும் வகையில் அவருக்கு ‘எக்மோ’ என்னும் அதிநவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது. உயிரை காப்பாற்ற முயற்சி இந்த நிலையில், நேற்று மதியம் 12.45 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சுப்...

ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் அப்பல்லோ மருத்துமனை புதிய தகவல்

Image
சென்னை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். •அதிகாலை 4 மணி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுகவினர் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.  •அதிகாலை 4.30 மணி - முதல்வர் ஜெயலலிதாவிற்கு இதய ரத்த நாள அடைப்பை போக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது •காலை 7 மணி - தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. - அப்பல்லோ வளாகத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டது . •காலை 7.30 மணியளவில் அதிமுக அமைச்சர்கள் அப்பல்லோவிற்கு விரைந்தனர் •காலை 8 மணி அஞ்சியோ சிகிச்சைக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்  •காலை 8.30 மணி மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் அப்பல்லோ விரைந்தனர் •காலை 9 மணி மருத்துவர் கில்லானி தலைமையில் 4 பேர் கொண்ட குழு நரங், தல்வார், பிரிகன், ட்ரிஹா ஆகியோர் சென்னை விரைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.ந...

ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக கவலைக்கிடம் - லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து  குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். பல்வேறு   பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித் தது. லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.  சிங்கப்பூரில் இருந்து   பிசியோதெரபி நிபுணர்களும் வந்து உடல் உறுப்புகள் அசைவுப் பயிற்சி அளித்தனர். இதன் காரணமாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் 90 சதவீதம் சுயமாக சுவாசிப்பதாக அறி விக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த மாதம் 19-ந்தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வேறு ஒரு  அறைக்கு மாற்றப்பட்டார். 72 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, எப்போது விரும்புகிறாரோ, அப்போது வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவ மனையின் தலைவர் டாக் டர் பிரதாப் ரெட்டி கூற...

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் தேற விரும்புகிறேன்: ராகுல் காந்தி

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அவரது உடல் நிலை மிக மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி  பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறுகையில்,”  நான் இந்த செய்தியை கேட்டேன். வெகு விரைவில் ஜெயலலிதா உடல் நலம் தேறுவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார். 

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடி யாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர். இதே போல வெளியூரில் இருந்த  எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும்படி உத்தரவிடப்பட்டது.இதைத்  தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்தனர். அவர் கள் அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களின் அவசர கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 11 மணிக்கு நடந்தது  இந்த கூட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த அவசர கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கூட்டத்தில்  சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம்,தேர்ந்து எடுக்கபட்டதாக தகவல் வெளியிடபட்டது. சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில்  இன்று 6 மாலை  மணிக்கு மீண்டும் நடைபெற உள்ளதாக தகவல்...

உலகிற்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாக்கிஸ்தான் - இந்திய பிரதமர் மோடி ஆவேசம்

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக  பேசினார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோடில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:  ஆசியாவில் நடக்கும் அனைத்து பயங்கரவாத சம்பவங்களுக்கும் அந்த நாடு தான் காரணம். பாதிக்கப்படும் நாடுகள் அனைத்தும் அந்த நாட்டை தான் குறை கூறுகின்றன. பயங்கரவாதிகள், அந்நாட்டு தெருக்களில் சுதந்திரமாக திரிகிறார்கள். ஒசாமா பின்லேடனும் அங்கு தான் பதுங்கி இருந்தான். அவனை போன்ற கொடூரமான பயங்கரவாதிகளை பாதுகாத்து வளர்கிறது. சமீபத்தில் நம் தேசத்தின் 18 வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிற்காக தியாகம் செய்துள்ளனர். நமது அண்டை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பயங்கரவாதிகளால் அவர்கள் உயிரிழந்துள்ளார்கள். யூரி தாக்குதல் நாடு முழுவதும் அந்நாட்டின் மீதான கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. நமது ராணுவத்தினரை எண்ணி நாம் பெருமை கொள்வோம். யூரி தாக்குதலுக்கு காரணமானவர்களை மறக்கமாட்டேன். கடந்த சில மாதங்களில் 110 பயங்கரவாதிகள் நம் வீரர்களால் சுட்ட...

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது: அப்பல்லோ நிர்வாகம் தகவல்

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர்.  ஜெயலலிதா உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ நிர்வாகமும் தெரிவித்துள்ளது.  இதை தொடர்ந்த,  அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி முதல் அமைச்சர் அம்மா அவர்கள்  உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.   ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், அமைச்சர்கள் ,அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர்அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலை தேறி வருவதால் இன்று காலை வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்பு பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க கோரிக்கை

சென்னை ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை ஐக்கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்ததோடு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது   இது தொடர்பான மனு, சென்னை ஐக்கோர்ட் நீதிபதி சிவஞானம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமர்வில், மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, பிற்பகல் 2.15 மணிக்கு மனு விசாரணைக்கு வருகிறது. ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க ராம்குமார் தரப்பு விடுத்த கோரிக்கை ஏற்பு.பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க அரசு தரப்பு உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்க்கப்பட்டது ..

மன்ஹட்டன், நியூஜெர்சி குண்டு வெடிப்பு குற்றவாளி அகமத் கான் ரகாமி கைது

அமெரிக்காவின் மன்ஹட்டன், நியூஜெர்சி குண்டுவெடிப்பு குற்றவாளி அகமத் கான் ரகாமியை போலீஸ் கைது செய்தது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களை மையமாக வைத்து கடந்த 3 நாட்களாக குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. முதலாவதாக நியூஜெர்சி கடற்கரையோர பூங்கா நகரில் கடந்த 17–ந்தேதி காலையில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அன்று இரவு மன்ஹட்டன் அருகே உள்ள செல்சீ நகரில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 29 பேர் படுகாயமடைந்தனர். சிறிது நேரத்துக்குப்பின் அந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் மற்றொரு வெடிக்காத குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவங்களால் நிகழ்ந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிகாலையில் நியூஜெர்சியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. அங்குள்ள எலிசபெத் ரெயில் நிலையம் அருகே குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், அங்கே பையில் மர்ம பொருள் இருந்ததை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும...

முதல்வருக்கு முத்தம்

கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையாவை இன்று பஞ்சாயத்து பெண் கவுன்சிலர் முத்தமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் மந்திரியை முத்தமிட்ட பஞ்சாயத்...

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

Image
பூந்தமல்லி, போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் பரவியது. அவர் தற்கொலை செய்து கொண்டதால், போதை மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். போதை மறுவாழ்வு மையம் சென்னை நொளம்பூர், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி(வயது 35). இவருடைய மனைவி அம்மு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. குப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக அவரை, மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். சுமார் 1 மாதம் அங்கு சிகிச்சை பெற்று வந்த குப்புசாமி, கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர், தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் போதை மறுவாழ்வு மையத்தில் தான் சிகிச்சை பெறும்போது குடியை மறக்கும்படி அங்கு பணி புரியும் ஊழியர்கள் தன்னை பலமாக தாக்கினார்கள் என்று கூறி வந்ததாக தெரிகிறது. வாலிபர் தற்கொலை இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றுமுன்தினம் குப்புசா...

மதுவிலக்கை அமல்படுத்த பீஹார் தயார்:தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் நிதிஷ்

Image
. பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், முதல்வராக உள்ளார்.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். அதன்படி, 'ஏப்ரல், 1ம் தேதி முதல், பூரண மதுவிலக்கை அடையும் வகையில், முதற்கட்ட நடவடிக்கை துவங்கும்' என, சமீபத்தில் அறிவித்தார் நிதிஷ். இதையடுத்து, பீஹாரில் சாராய விற்பனை முற்றிலுமாக கைவிடப்படுகிறது. நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களில், மூன்றாவது இடத்தில் உள்ள பீஹாரில், 10 கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 6,000 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.இன்று முதல், நகர்ப் பகுதிகளில் உள்ள, 656 மதுக்கடைகளைத் தவிர, 38 மாவட்டங்களில் உள்ள மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.மீதமுள்ள மதுக்கடைகளும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பீஹாரில், 1977 - 78ல் அப்போதைய முதல்வர் கர்பூரி தாக்கூர் தலைமை யிலான அரசு, பூரண மதுவிலக்கை அறிமுகம் செய்தது. ஆனால், அது தோல்வியில்...

நேர்மையான மின் நுகர்வோர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை: பிரகாஷ் ஜவடேகர் விமர்சனம்

Image
பியூஷ் கோயல் குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அளித்த விளக்கம் தொடர்பாக தற்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழக அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார். மேலும், மத்திய அரசின் தலைமையிலான மின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காமல், தமிழக அரசு மின்சாரம் திருடுபவர்களை காப்பதில்தான் ஆர்வம் காட்டி வருகிறது என்று பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: Uday திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நேர்மையான மின் நுகர்வோருக்கு சிறந்த பயன்கள் கிடைக்கும். ஆனால், நேர்மையான மின் நுகர்வோர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை. மாறாக விதிமுறைகளுக்குப் புறம்பாக மின் இணைப்பு செய்து கொள்பவர்கள், மின்சாரம் திருடுபவர்களை காப்பதில்தான் தமிழக அரசுக்கு ஆர்வம் உள்ளது போல் தெரிகிறது. இந்த திட்டம் 18 மாநிலங்களில் 90% மக்களால் ஏற்கப்பட்டுள்ளது, பாராட்டப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழகம் இதில் கையெழுத்திடவில்லை. ஒருநாள் இத்திட்டத்தின் பயன்களை உணர்ந்து தமிழக அரசும் கை...

Kolkata flyover tragedy: Death toll rises to 21, around 150 people still trapped under debris

Image
A portion of a Vivekananda flyover near Ganesh Talkies in Girish Park collapsed on Thursday afternoon leaving as many as 21 dead and over 80 people injured. Several others, including a mini-bus carrying passengers, and cars are still trapped under the mounds of rubble. Eye-witnesses say that there could be around 150 people under the debris. Rescue operations are underway, with the light falling only making it more difficult for the army and the NDRF to carry on the rescue operations. While it was rumoured that the Army had entered into a tiff with the Kolkata Police officials resulting in the withdrawal of the troops, it issued a statement later in the evening that the allegations are baseless and that they are still at the spot carrying out the rescue operations. The flyover was the object of some controversy, with lots of residents complaining about it, particularly due to the congestion it caused. Locals complained that the Fire and Emergency Services and...

உத்ரகாண்டை தொடர்ந்து தில்லி ஆட்சியையும் கவிழ்க்க சதி: கேஜரிவால் குற்றச்சாட்டு

Image
புது தில்லி:  உத்ரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தில்லி மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். தில்லி பேரவையில் கேஜரிவால் ஆற்றிய உரை விவரம்: உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் சாசனத்தை சாகடிப்பதாக உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து தில்லி, ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. ஒரு பெரிய தொழிலதிபர் மூலம் தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்கு பாஜக முயற்சித்ததாக உளவுத் துறை அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். அடுத்து வரும் இரு ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஒரு இடத்தைக்கூட தங்களால் வெல்ல முடியாது என பாஜகவுக்குத் தெரியும்.  அதனால்தான் குண்டர்களின் ராஜ்யத்தை அவிழ்த்துவிட்டுள்ளது. தில்லியில் முதலில் 21 எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்யவும், பின்னர் 23 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங...
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் விதை, உரம், டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்: ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விதை, உரம், பூச்சிமருந்து, டிராக்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த மாமல்லபுரம் அடுத்த எச்சூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.வி.கே.வாசு, மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காரணை ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எச்சூர் ஊராட்சி முன்னாள்  தலைவர் குமரேசன் வரவேற்றார்.  கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: ஒவ்வொருவரின் வாக்கும் விலை மதிக்கமுடியாதது. அப்படிபட்ட வாக்குகளை பணத்திற்காக விற்க கூடாது. ஊழல் கட்சிகளை புறக்கணிக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர். மக்கள் அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆவதற்கு மக்கள் முன்வந்து ஆவலுடன் இருக்கின்றனர். பா.ம.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, ப...