உலகிற்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாக்கிஸ்தான் - இந்திய பிரதமர் மோடி ஆவேசம்

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக  பேசினார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோடில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

 ஆசியாவில் நடக்கும் அனைத்து பயங்கரவாத சம்பவங்களுக்கும் அந்த நாடு தான் காரணம். பாதிக்கப்படும் நாடுகள் அனைத்தும் அந்த நாட்டை தான் குறை கூறுகின்றன.

பயங்கரவாதிகள், அந்நாட்டு தெருக்களில் சுதந்திரமாக திரிகிறார்கள். ஒசாமா பின்லேடனும் அங்கு தான் பதுங்கி இருந்தான். அவனை போன்ற கொடூரமான பயங்கரவாதிகளை பாதுகாத்து வளர்கிறது.

சமீபத்தில் நம் தேசத்தின் 18 வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிற்காக தியாகம் செய்துள்ளனர். நமது அண்டை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பயங்கரவாதிகளால் அவர்கள் உயிரிழந்துள்ளார்கள். யூரி தாக்குதல் நாடு முழுவதும் அந்நாட்டின் மீதான கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

நமது ராணுவத்தினரை எண்ணி நாம் பெருமை கொள்வோம். யூரி தாக்குதலுக்கு காரணமானவர்களை மறக்கமாட்டேன். கடந்த சில மாதங்களில் 110 பயங்கரவாதிகள் நம் வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் வெற்றி பாதையில் செல்கிறோம். அந்நாடு விரைவில் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும்.
காஷ்மீரை நம்மிடமிருந்து பறிக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானின் குறிகோள். அதற்குமுன் உங்கள் வசம் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கிலிஜிட் மற்றும் பலுசிஸ்தானின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்.

பாகிஸ்தான் மக்களுடன் இங்கிருந்து பேச விரும்புகிறேன். 1947 முன்னர் பாகிஸ்தான் தலைவர்கள் கூட எங்களுடைய தேசத்திற்கு மரியாதை கொடுத்தார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருநாளில் சுதந்திரம் பெற்றது. ஆனால், இருநாட்டின் வளர்ச்சியை நீங்களே ஒப்பிட்டு பாருங்கள். பாகிஸ்தான் நாட்டு மக்கள் வேலையின்மை, கல்வியின்மை, ஏழ்மை உள்ளிட்டவைகளுக்கு எதிராக போரிட வேண்டும். இந்தியா தேசம் உலகிற்கு இன்ஜினியர்களை ஏற்றுமதி செய்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியா பாகிஸ்தானுடன் வளர்ச்சியில் சண்டையிட தயாராக உள்ளது. உங்கள் நாட்டில் உள்ள ஏழ்மையை விரட்ட முன் வாருங்கள். சொந்த மக்களுக்கு சரியான கல்வி கொடுங்கள். வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்

பாகிஸ்தானின் சொந்த மக்கள் அந்நாட்டு அரசாங்காத்தை எதிர்த்து போரிடும் நாள் விரைவில் வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை