முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது: அப்பல்லோ நிர்வாகம் தகவல்

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர். 
ஜெயலலிதா உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ நிர்வாகமும் தெரிவித்துள்ளது.  இதை தொடர்ந்த,  அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி முதல் அமைச்சர் அம்மா அவர்கள்  உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.  

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், அமைச்சர்கள் ,அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர்அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலை தேறி வருவதால் இன்று காலை வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை