ரஷ்ய விமானம் கடலில் விழுந்து விபத்து: 91 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான விமானம் கருங்கடலில் விழுந்ததில் 91 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவின் சோச்சி என்ற நகரில் கிளம்பிய, டியு - 152 ரக விமானத்தில் 83 யபணிகளும், விமான படையை சேர்ந்த 8 வீரர்களும் இருந்துள்ளனர். இந்த விமானம் சிரியாவின் லடாகியா என்ற நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், ரேடார் கருவியில் உள்ள சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தை முழுமையாக தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் கருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தின் உதிரி பாகங்களும், உடல்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய மீடியாக்கள் கூறியுள்ளன.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை