ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக கவலைக்கிடம் - லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே


முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து  குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு   பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித் தது. லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.  சிங்கப்பூரில் இருந்து   பிசியோதெரபி நிபுணர்களும் வந்து உடல் உறுப்புகள் அசைவுப் பயிற்சி அளித்தனர்.

இதன் காரணமாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் 90 சதவீதம் சுயமாக சுவாசிப்பதாக அறி விக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த மாதம் 19-ந்தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வேறு ஒரு  அறைக்கு மாற்றப்பட்டார்.

72 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, எப்போது விரும்புகிறாரோ, அப்போது வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவ மனையின் தலைவர் டாக் டர் பிரதாப் ரெட்டி கூறி னார். இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று பிற்பகல் திடீரென மாரடைப்பு  ஏற்பட்டது. அவர் உடல் நிலையில் பின் னடைவு காணப்பட்டது.

இதையடுத்து அவர் அவசரம், அவசரமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதய மருத்துவ நிபுணர்கள், நுரையீரல் மருத்துவ நிபுணர் கள், தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் ஆகியோர் ஒருங் கிணைந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

முதல்-அமைச்சர் ஜெய லலிதாவுக்கு   “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையைத் தீவிரப்படுத்தினார்கள்.

இதற்கிடையே ஜெய லலிதாவுக்கு  ஏற்கனவே சிகிச்சை  அளித்துள்ள லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ்  டாக்டர்களுடன் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தொடர்பு கொண்டு  பேசினார்கள். அந்த டாக்டர்களிடம் தற்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல் நலம் பின்னடைவு பற்றி விளக்கமாக கூறப்பட்டது.

முதலமைச்சருக்கு சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 24 மணி நேரத்திற்கு பின்னரே, அதன் தாக்கத்தை உணர முடியும்.ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது அப்பல்லோ மருத்துவமனை தகவல்  அப்பல்லோ மருத்துவமனை தனது இன்று காலை வெளீயிடபட்ட புதிய அறிக்கையில் கூறபட்டு இருந்தது.

அப்பல்லோ மருத்துவமனை செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டி தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள டுவிட்டர் தகவலில் மடுத்துவர்கலீன் தீவிர முயற்சிக்கு பிறகும் முதலவர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை.  தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். என கூறி உள்ளார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் ரிச்சர்ட் பீலே முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை மிக மிக மோசமாக உள்ளது. அதிக பட்சமாக என்ன செய்யமுடியோ அதை செய்தாகி விட்டது.சரவ்தேச தரத்தில் சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லை. என கூறி உள்ளார்.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை