பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் விதை, உரம், டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்: ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விதை, உரம், பூச்சிமருந்து, டிராக்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த மாமல்லபுரம் அடுத்த எச்சூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.வி.கே.வாசு, மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காரணை ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எச்சூர் ஊராட்சி முன்னாள் தலைவர் குமரேசன் வரவேற்றார்.
கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:
ஒவ்வொருவரின் வாக்கும் விலை மதிக்கமுடியாதது. அப்படிபட்ட வாக்குகளை பணத்திற்காக விற்க கூடாது. ஊழல் கட்சிகளை புறக்கணிக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர். மக்கள் அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆவதற்கு மக்கள் முன்வந்து ஆவலுடன் இருக்கின்றனர்.
பா.ம.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, பூச்சிமருந்து, டிராக்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும், இந்தியாவில் ஜனநாயகம் கேள்வி குறியாக உள்ளது. அன்புமணி முதல்வராக வந்தால் சாராயம் இல்லாத நாடாக தமிழ்நாட்டை மாற்றுவோம். அனைவருக்கும் உயர்தரக் கல்வி, உயர்தர மருத்துவசிக்கிச்சை அளிக்கப்படும். விவசாயிகள் அவரவர் விளைப் பொருள்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்துக்கொள்ளவும், கரும்புக்கு விலை டன் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வழங்க நடவடிக்கு எடுக்கப்படும் இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
Comments
Post a Comment