நேர்மையான மின் நுகர்வோர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை: பிரகாஷ் ஜவடேகர் விமர்சனம்

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தமிழிசை. | படம்: ம.பிரபு.

பியூஷ் கோயல் குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அளித்த விளக்கம் தொடர்பாக தற்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழக அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
மேலும், மத்திய அரசின் தலைமையிலான மின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காமல், தமிழக அரசு மின்சாரம் திருடுபவர்களை காப்பதில்தான் ஆர்வம் காட்டி வருகிறது என்று பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

Uday திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நேர்மையான மின் நுகர்வோருக்கு சிறந்த பயன்கள் கிடைக்கும். ஆனால், நேர்மையான மின் நுகர்வோர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை. மாறாக விதிமுறைகளுக்குப் புறம்பாக மின் இணைப்பு செய்து கொள்பவர்கள், மின்சாரம் திருடுபவர்களை காப்பதில்தான் தமிழக அரசுக்கு ஆர்வம் உள்ளது போல் தெரிகிறது.

இந்த திட்டம் 18 மாநிலங்களில் 90% மக்களால் ஏற்கப்பட்டுள்ளது, பாராட்டப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழகம் இதில் கையெழுத்திடவில்லை. ஒருநாள் இத்திட்டத்தின் பயன்களை உணர்ந்து தமிழக அரசும் கையெழுத்திடும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் மின் விநியோக நிறுவனங்கள் கடன் சுமையிலிருந்து மீள முடியும். அவர்களுக்கு வட்டி செலவு பெரிய அளவில் குறையும். மேலும் பல நன்மைகளும் இதில் உள்ளன.

அனைவருக்கும் எல்.இ.டி. பல்புகள் திட்டத்தையும் தமிழகம் ஏற்காதது ஏன் என்பதும் தெரியவில்லை. இது மக்களுக்கு நேரடியாக நன்மை அளிக்கும் திட்டமாகும். பருவநிலை மாற்ற முயற்சியாகும் இது. ஆனால் இதில் எதிலும் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை. நாடு முழுதும் 9 கோடி பேர் இந்தத் திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் குறித்தும் தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லை. குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் தமிழகம் மட்டுமே இன்னும் அதன் முன்மொழிவுகளை அளிக்கவில்லை. தொடர்ந்து வலியுறுத்திய போது, மே 16-ம் தேதி வரை கால அவகாசம் கேட்டனர்.

ஆனால் நாங்கள் ஓராண்டு காலமாக இந்த விவகாரத்தை பின் தொடர்ந்து வருகிறோம். கேரளா மற்றும் பிற மாநிலங்கள் ஒரு மாதம் முன்பு அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால் தமிழகம் சமர்ப்பிக்கவில்லை.

எங்களுக்கு கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை இருக்கிறது, எனவே ஒரு மாநிலம் இதனை முன்னெடுக்கவில்லையெனில் மக்களுக்குத்தான் கஷ்டம்'' என்று ஜவடேகர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது