மதுவிலக்கை அமல்படுத்த பீஹார் தயார்:தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் நிதிஷ்
.
பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், முதல்வராக உள்ளார்.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். அதன்படி, 'ஏப்ரல், 1ம் தேதி முதல், பூரண மதுவிலக்கை அடையும் வகையில், முதற்கட்ட நடவடிக்கை துவங்கும்' என, சமீபத்தில் அறிவித்தார் நிதிஷ். இதையடுத்து, பீஹாரில் சாராய விற்பனை முற்றிலுமாக கைவிடப்படுகிறது.
நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களில், மூன்றாவது இடத்தில் உள்ள பீஹாரில், 10 கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 6,000 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.இன்று முதல், நகர்ப் பகுதிகளில் உள்ள, 656 மதுக்கடைகளைத் தவிர, 38 மாவட்டங்களில் உள்ள மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.மீதமுள்ள மதுக்கடைகளும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஹாரில், 1977 - 78ல் அப்போதைய முதல்வர் கர்பூரி தாக்கூர் தலைமை யிலான அரசு, பூரண மதுவிலக்கை அறிமுகம் செய்தது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.
அதே நேரத்தில், பூரண மதுவிலக்கை வெற்றிகரமாக அமல்படுத்த, தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாக, நிதிஷ்குமார் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது, குஜராத், நாகாலாந்து மற்றும் மணிப்பூரின் சில பகுதிகளி லும், லட்சத் தீவுகளிலும் மதுவிலக்கு அமலில் உள்ளது. கேரளாவில், 2014 முதல் படிப்படியாக மதுவிலக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
சொன்னதை செய்வோம்:ஓராண்டுக்குள், மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இதற்கு பெண்கள் மற்றும் மக்களின் ஆதரவு உள்ளது. நாங்கள் சொன்னதை செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்.நிதிஷ்குமார்,பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்.
நல்ல துவக்கம்:மதுவிலக்கை அமல்படுத்த, பீஹார் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்:
நகர்ப்பகுதியில் உள்ள, 656 கடைகளில், இந்தியாவில் தயாரிக்கும் வெளிநாட்டு மதுவகைகள் மட்டும் கிடைக்கும்மாநிலம் முழுவதும் சாராய விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதுஇதன் மூலம், அரசுக்கு, ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். 2005 - 06ல், 319 கோடி ரூபாயாக இருந்த மது விற்பனை மூலமான வருமானம், 2015 - 16ம் நிதியாண்டில், 4,000 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது
மதுவிலக்குக்காக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, கள்ளச் சாராயம் தயாரிப்போர், விற்பனையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம், மரண தண்டனை விதிக்கப்படும்
குடித்துவிட்டு சாலையில் ரகளை செய்தால், சிறை தண்டனையுடன், கடும் அபராதமும் விதிக்கப்படும்சட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் பொறுப்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தவறு நடந்தால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும்
மார்ச், 1ம் தேதி முதலே சாராய, மது உற்பத்தியை நிறுத்தும்படி, மது ஆலைகளுக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது மொலாசஸ், எத்தனால் தயாரிப்பில் அவர்கள் ஈடுபடுகின்றனர்
அண்டை மாநிலங்கள் மற்றும் நேபாளம், வங்கதேசம், பூடான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து, மதுவகைகள் கடத்தி வரப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'நாளை முதல்குடிக்க மாட்டோம்''மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில், இனி குடிக்க மாட்டோம்' என, பீஹார்எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும்உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.கட்சி பேதமில்லாமல், அனைத்து உறுப்பினர்களும், முதல்வர் நிதிஷ்குமார் முன்னிலையில், சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் இந்த உறுதியை ஏற்றனர்.
தமிழகத்திலும்வருமா?சட்டசபை தேர்தலை சந்திக்கும் தமிழகத்திலும், மதுவிலக்கு தொடர்பான விவாதம் நடந்து வருகிறது.தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.தேர்தல் முடிவுக்குப் பின் அமையும் புதிய அரசு, இது குறித்து என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதே, வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments
Post a Comment