முதல்வருக்கு முத்தம்
கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையாவை இன்று பஞ்சாயத்து பெண் கவுன்சிலர் முத்தமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மந்திரியை முத்தமிட்ட பஞ்சாயத்து பெண் கவுன்சிலர்: கர்நாடகத்தில் பரபரப்பு
பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரில் உள்ள அரண்மனை திடலில் இன்று பாராட்டு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சித்தராமையாவின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது, அவரது அருகில் நின்றிருந்த பெண் கவுன்சிலர் கிரிஜா, திடீரென்று முதல் மந்திரி சித்தராமையாவின் கன்னத்தில் முத்தமிட்டார்.
அசடுவழிய கன்னத்தை துடைத்துகொண்ட அவர், ‘அந்தப் பெண் என் மகள் மாதிரி’ என்று கூச்சத்துடன் கூறினார். சித்தராமையாவின் சட்டமன்ற தொகுதியான வருணா பகுதியை சேர்ந்த அந்த பெண் கவுன்சிலர் திருமணமானவர் என்பது தெரியவந்துள்ளது.
முதல் மந்திரி மீது எங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் உயர்வான அபிப்ராயம் உள்ளது. நான் எப்போதுமே அவரை அப்பா என்றுதான் அழைப்பேன். அவரை வெகு நெருக்கமாக பார்த்த சந்தோஷத்தில் சற்று உணர்ச்சிவசப்பட்டு அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டேன் என கிரிஜா கூறுகிறார்.
Comments
Post a Comment