Posts

Showing posts from 2018

கஜா நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரெயிலில் சரக்கு கட்டணம் இல்லை - ரெயில்வே நிர்வாகம்

கஜா நிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க ரெயில்வே அமைச்சர் கோயலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இதனையடுத்து புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரெயிலில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரயிலில் சரக்கு கட்டணம் கிடையாது.  தமிழகத்திற்குள்ளும் பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு டிச.10 வரை இந்த விலக்கு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள ஆளுநர் சதாசிவம் கஜா புயல் நிவாரண நிதி ரூ.1 லட்சம் வழங்கினார்

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பினை சந்தித்தன. கஜா புயலின் தாக்குதலால் எண்ணற்ற தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.  இந்த புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர். கஜா புயலால் பாதிப்படைந்த பொதுமக்களில் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறுவதற்காக திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பெரிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், கேரள ஆளுநர் சதாசிவம் தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் தொகையை தமிழக முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார...

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

Image
கடலூர் மாவட்டம் ,விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் மூன்று ஆண்டுகளாக போக்குவரத்திற்கு பயன்படாத ரயில்வே சுரங்கப்பாதையை இழுத்து மூடக்கோரி கிராம மக்கள் சார்பில் செம்பளக்குறிச்சி ரயில் பாதையில் மறியல் செய்ய பொதுமக்கள் ரயில் மரியலில் ஈடுபட்டு வருகின்றனர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்து செம்பளக்குறிச்சி, கவனை சித்தேரிக்குப்பம் ஆகிய கிராமங்களுக்கு விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை செல்வதற்கு இந்த ரயில்வே சுரங்கபாதை பயன் படுத்தி வருகின்றனர் மழை காலத்தில் தனிரால் சுரங்க பாதை முற்றிலும் முழிக்கிவிடுகின்றன அவசமாக மருத்துவமனை செல்வதற்கும் ஆம்லான்ஸ் வரவும் முடியாத நிலை அப்படி வரவேண்டும் என்றால் 5 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டும் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லுவதிலும் சிரமம் ஏற்படுகின்றது பயன் படத்தை சுரங்க பாதை மூட கோரி இரயில் மறியலில் ஈடுபடுகின்றனர் 

2015-17-ல் சண்டைகளில் கிட்டத்தட்ட 400 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு - உள்துறை அமைச்சகம்

2015-17-ல் மூன்று ஆண்டுகளில் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்பட பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 400 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களே அதிகமாக உயிரிழந்து உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 167 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மிகவும் முக்கியமான பாதுகாப்பு மைய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள். 2015-ல் 62 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும், 2016-ல் 58 வீரர்களும், 2017-ல் 47 வீரர்களும் உயிரிழந்துள்ளனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 103 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் நக்சலைட் தீவிரவாதிகள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளனர். 2015-ல் 9 வீரர்களும், 2016-ல் 42 வீரர்களும், 2017-ல் 52 வீரர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சஷாஸ்திர சீமா பல் (எஸ்.எஸ்.பி.) படைப்பிரிவை சேர்ந்த 48 ...

ராகுல் காந்தி 'சிறந்த பிரதமர் மெட்டிரியல்; சந்திரபாபு நாயுடு எதிர்கட்சிகளை சிறப்பாக ஒன்றிணைக்கிறார் - வீரப்ப மொய்லி

தெலுங்கான மாநிலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'சிறந்த பிரதமர் மெட்டிரியல், அவர் பிரதமராவார். ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். தேசிய அளவில் காங்கிரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளை இழந்து வருகிறது. பிரதமர் பதவிக்கு ராகுலுக்கு மாற்று என்ற கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. பிரதமராவதற்கு சரியான, சிறப்பான நபர் ராகுல் மட்டுமே. தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்., தான் வெற்றி பெறும். இந்த வெற்றி எங்கள் கட்சி தலைவரான ராகுலுக்கு கூடுதல் மதிப்பையும், பலத்தையும் பெற்று தரும். யார் அடுத்த பிரதமர் என்பது தொடர்பாக பா.ஜ., விற்கு எதிரான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் மோடி மற்றும் பா.ஜ.,விற்கு எதிராக ஒன்றுபட்டு வருகின்றனர். மோடி மற்றும் பார...

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1000 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1000 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புயலால் முழுவதும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4, 100 நிவாரணம் , முகாம்களில் தங்கி உள்ள குடும்பத்திற்கு பாத்திரம் உட்பட பொருட்கள் வாங்க ரூ.3,800 வழங்கப்படும். விவசாயம்: சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள எக்டேருக்கு ரூ.1, 92,500, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,700 சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் அளிக்கப்படும். மீனவர்களுக்கு இழப்பீடு: முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதி சேதமடைந்தவைகளுக்கு ரூ.3 லட்சம் , மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.5000 , முழுவதும் சேதமான கட்டுமரங்களுக்கு தலா ரூ.42ஆயிரம், பகுதி சேதமடைந்தவைகளுக்கு தலாரூ.20ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை

கடந்த 2000-ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஒட்டல் வழக்கில் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . இதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை இலக்கியம் பட்டியைச் சேர்ந்த விவசாயக் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்துக்கு தருமபுரி அருகே அதிமுகவினர் தீ வைத்தனர். நடந்த இந்த சம்பவத்தில், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் பலியாயினர். தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் அதிமுகவினர் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு இந்த வழக்கில், நெடுஞ் செழியன், ரவீந்திரன்,முனியப்பன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த 3 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வேலூர் சிறையில் உள்ள ரவீந்திரன், நெடுஞ்செழியன் மற்றும் முனியப்பனை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை ஆகின்றனர். ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்து 3 ...

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் கஜா புயல் பாதிப்புக்கு: ரூ.50 லட்சம் நிவாரண உதவி

’கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன. .புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1. கோடி நிவாரன உதவி அறிவிக்கப்பட்டு உள்து. கஜா' புயலால் கடுமையாகப் பாதிக்கப்படட் டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்...

CHANDRA TV: புயல் பாதித்த பகுதிகளில் : உயர் போலீஸ் அதிகாரிகள் ...

CHANDRA TV: புயல் பாதித்த பகுதிகளில் : உயர் போலீஸ் அதிகாரிகள் ... : புயல் பாதித்த பகுதிகளில் : உயர் போலீஸ் அதிகாரிகள் நியமனம் முதல்–அமைச்சர் அறிவிப்பு  திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல்...

புயல் பாதித்த பகுதிகளில் : உயர் போலீஸ் அதிகாரிகள் நியமனம் முதல்–அமைச்சர் அறிவிப்பு

புயல் பாதித்த பகுதிகளில் : உயர் போலீஸ் அதிகாரிகள் நியமனம் முதல்–அமைச்சர் அறிவிப்பு  திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘கஜா’ புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. ‌ஷகீல் அக்தர், திருவாரூர் மாவட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், தஞ்சை மாவட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அடைந்த ரெயில்வே பகுதிகளை சீரமைக்கும் பணியை கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை, திருவாரூர்,மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் சீராகும்

சென்னை கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கஜா புயலால்  தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளன.  நாகை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன.

கடலூர், நாகை, ராமநாதபுரத்தில் முழு அலர்ட்

கடலூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் முழு அலர்ட்டில் வைக்கப்பட்டு உள்ளது. கஜா புயல் இரவு 8 மணிக்கு மேல் கரையை கடக்கலாம் என்பதால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், வேம்பாறு, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், மூக்கையூர், சாயல்குடி, தேவிப்பட்டினம், தொண்டி, தம்புதாழை, வேதாளை, தனுஷ்கோடி , அரிச்சல்முனை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட 180 கடலோர கிராமங்கள் முழு கண்காணிப்பில் உள்ளது. 23 காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 30 ஆயிரம் பேர் தங்க முடியும். குடிநீர், உணவு, மற்றும் நிவாரண பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  1,520 விசைப்படகுகள், 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மரங்கள் , மின்கம்பங்கள் சாய்ந்தால் , மீட்பு பணியில் 140 ஜேசிபி, 51 பொக்லைன், 90 பம்புசெட்டுகள், தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி ஊழியர் போலீசார் ஆகியோரை கொண்ட 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் அமைதியாக இருப்பதால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். நவபாஷணம் கோயில் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் வெளிநடப்பு செய்தன...

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நீதிபதிகள் அமர்வு, அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்...

அசாமில் 2 இளைஞர்கள் படுகொலை வழக்கு; 48 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அசாமில் கடந்த ஜூன் 8ந்தேதி கர்பி அங்லோங் பகுதியில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக நிலோத்பல் தாஸ் மற்றும் அபிஜீத் நாத் ஆகிய இரு நண்பர்கள் சென்றனர். அவர்கள் தங்களது காரில் திரும்பி வந்தபொழுது பஞ்சுரி கசாரி என்ற பகுதியில் கிராமவாசிகள் கொண்ட கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது.  இவர்கள் இருவரும் குழந்தை கடத்தல்காரர்கள் என கூறி கும்பலாக 2 பேரையும் காரில் இருந்து இழுத்து போட்டு பல மணிநேரங்களாக அடித்து, உதைத்து உள்ளனர்.  பின் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 48 பேர் குற்றவாளிகளாக அறியப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இவ்வழக்கில் 844 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர்.  இதில் 71 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.  90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை அசாம் போலீசார் சமர்ப்பித்து உள்ளது மிக பெரிய சாதனை என டி.ஜி.பி. சைகியா தெரிவித்துள்ளார்.