புயலால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை, திருவாரூர்,மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் சீராகும்
சென்னை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளன. நாகை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன.
Comments
Post a Comment