கடலூர், நாகை, ராமநாதபுரத்தில் முழு அலர்ட்

கடலூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் முழு அலர்ட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

கஜா புயல் இரவு 8 மணிக்கு மேல் கரையை கடக்கலாம் என்பதால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், வேம்பாறு, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், மூக்கையூர், சாயல்குடி, தேவிப்பட்டினம், தொண்டி, தம்புதாழை, வேதாளை, தனுஷ்கோடி , அரிச்சல்முனை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட 180 கடலோர கிராமங்கள் முழு கண்காணிப்பில் உள்ளது. 23 காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 30 ஆயிரம் பேர் தங்க முடியும். குடிநீர், உணவு, மற்றும் நிவாரண பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

1,520 விசைப்படகுகள், 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மரங்கள் , மின்கம்பங்கள் சாய்ந்தால் , மீட்பு பணியில் 140 ஜேசிபி, 51 பொக்லைன், 90 பம்புசெட்டுகள், தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி ஊழியர் போலீசார் ஆகியோரை கொண்ட 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் அமைதியாக இருப்பதால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். நவபாஷணம் கோயில் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை