புயல் பாதித்த பகுதிகளில் : உயர் போலீஸ் அதிகாரிகள் நியமனம் முதல்–அமைச்சர் அறிவிப்பு
புயல் பாதித்த பகுதிகளில் : உயர் போலீஸ் அதிகாரிகள் நியமனம் முதல்–அமைச்சர் அறிவிப்பு
திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ‘கஜா’ புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. ஷகீல் அக்தர், திருவாரூர் மாவட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், தஞ்சை மாவட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு அடைந்த ரெயில்வே பகுதிகளை சீரமைக்கும் பணியை கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
Comments
Post a Comment