ராகுல் காந்தி 'சிறந்த பிரதமர் மெட்டிரியல்; சந்திரபாபு நாயுடு எதிர்கட்சிகளை சிறப்பாக ஒன்றிணைக்கிறார் - வீரப்ப மொய்லி
தெலுங்கான மாநிலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'சிறந்த பிரதமர் மெட்டிரியல், அவர் பிரதமராவார். ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். தேசிய அளவில் காங்கிரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளை இழந்து வருகிறது.
பிரதமர் பதவிக்கு ராகுலுக்கு மாற்று என்ற கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. பிரதமராவதற்கு சரியான, சிறப்பான நபர் ராகுல் மட்டுமே. தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்., தான் வெற்றி பெறும். இந்த வெற்றி எங்கள் கட்சி தலைவரான ராகுலுக்கு கூடுதல் மதிப்பையும், பலத்தையும் பெற்று தரும்.
யார் அடுத்த பிரதமர் என்பது தொடர்பாக பா.ஜ., விற்கு எதிரான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் மோடி மற்றும் பா.ஜ.,விற்கு எதிராக ஒன்றுபட்டு வருகின்றனர். மோடி மற்றும் பாரதீய ஜனதாவை எதிர்ப்பதே எங்களின் நோக்கம் என கூறினார்.
Comments
Post a Comment