கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1000 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1000 ஆயிரம் கோடி உடனடியாக ஒதுக்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புயலால் முழுவதும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4, 100 நிவாரணம் , முகாம்களில் தங்கி உள்ள குடும்பத்திற்கு பாத்திரம் உட்பட பொருட்கள் வாங்க ரூ.3,800 வழங்கப்படும்.
விவசாயம்:
சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள எக்டேருக்கு ரூ.1, 92,500, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,700 சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் அளிக்கப்படும்.
மீனவர்களுக்கு இழப்பீடு:
முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதி சேதமடைந்தவைகளுக்கு ரூ.3 லட்சம் , மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.5000 , முழுவதும் சேதமான கட்டுமரங்களுக்கு தலா ரூ.42ஆயிரம், பகுதி சேதமடைந்தவைகளுக்கு தலாரூ.20ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment