அசாமில் 2 இளைஞர்கள் படுகொலை வழக்கு; 48 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
அசாமில் கடந்த ஜூன் 8ந்தேதி கர்பி அங்லோங் பகுதியில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக நிலோத்பல் தாஸ் மற்றும் அபிஜீத் நாத் ஆகிய இரு நண்பர்கள் சென்றனர்.
அவர்கள் தங்களது காரில் திரும்பி வந்தபொழுது பஞ்சுரி கசாரி என்ற பகுதியில் கிராமவாசிகள் கொண்ட கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது. இவர்கள் இருவரும் குழந்தை கடத்தல்காரர்கள் என கூறி கும்பலாக 2 பேரையும் காரில் இருந்து இழுத்து போட்டு பல மணிநேரங்களாக அடித்து, உதைத்து உள்ளனர். பின் இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் 48 பேர் குற்றவாளிகளாக அறியப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் 844 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர். இதில் 71 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை அசாம் போலீசார் சமர்ப்பித்து உள்ளது மிக பெரிய சாதனை என டி.ஜி.பி. சைகியா தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment