அஞ்சான் விமர்சனம்
இயக்குநர் லிங்குசாமியின் எழுத்து, இயக்கத்தில் 'சிங்கம்' சூர்யா நடித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் ''அஞ்சான்''. இது யாருக்கும் அஞ்சாத சிங்கமா.? சூர்யாவின் வெற்றி பட வரிசையில் சொக்கத் தங்கமா.? என்பதை இனி இங்கு உரசிப்பார்ப்போம்...! கதைப்படி, மும்பையில் தாதாவாக திகழ்ந்து, தகவலே இல்லாமல் போன தன் அண்ணன் சூர்யாவை தேடி கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இரயிலேறுகிறார் மாற்று திறனாளி தம்பி சூர்யா. மும்பை இரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கியதும், அந்தேரி ஏரியாவுக்கு அண்ணன் சூர்யாவைத் தேடி டாக்ஸி பிடிக்கும் தம்பி சூர்யாவை, வாங்க அந்தேரி என வரவேற்கும் டாக்ஸி டிரைவர் காமெடி சூரியை கூடவே கூட்டிக் கொண்டு வழக்கமான தமிழ் சினிமா பாணியில் அண்ணனைத் தேடாமல், தனி ஆளாக அண்ணன் சூர்யாவை தேடுகிறார் தம்பி சூர்யா. ஒரு கட்டத்தில் அண்ணன், தம்பி இருவர் அல்ல... இருவரும் ஒருவர்தான், ஒரே சூர்யா தான் எனும் உண்மை உலகுக்கும் (மும்பை நிழல் உலகுக்கும்...) உங்களுக்கும் (ரசிகர்களுக்கும்...) தெரிய வரும்போது 'அஞ்சான்' பதினாறடி பாஞ்சானாக ...