மும்பை வணிக வளாகத்தில் தீ

மும்பை: மும்பை நகர பகுதியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் பணியில், ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 21 மாடி கட்டடத்தில் உச்சிப்பகுதியில் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு தீயணைப்பு வீரர் பலியானார். இன்னும் 28 பேரை மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மும்பை, அந்தேரி பகுதியில் உள்ள லோட்டஸ் என்ற புகழ் பெற்ற வணிக வளாகத்தின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

புகை மூட்டம் காரணமாக ஒருவர் மூச்சுத்திணறி பலியானார். 13 முதல் 21 மாடிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் தீயணைப்பு வீரர்கள் சிக்கியிருப்பதாக தெரிகிறது.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை