கட்ஜூ குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: கே.ஜி. பாலகிருஷ்ணன்

புதுடில்லி: நீதிபதி பணி நீட்டிப்பு விவகாரத்தில் மார்கண்டேய கட்ஜூவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, சென்னை ஐகோர்ட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதி ஒருவரை பணியில் தொடர்ந்து நீட்டிக்கச் செய்ய அரசியல் ரீதியாக வற்புறுத்தல் இருந்ததாகவும், அதை அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் மார்கண்டேய கட்ஜூ தெரிவித்திருந்தார். கட்ஜூவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலளித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இவ்விவகாரத்தில் கட்ஜூ குற்றம் சாட்டுவது தமக்கு ஆச்சர்யமளிப்பதாகவும், யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். கட்ஜூவின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது