ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்படுகிறார் . ...
ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தங்களுடைய கட்சி எம். எல். ஏக்களிடம் தனது நண்பர்கள் மற்றும் கட்சியினர் மூலம் தொடர்பு கொண்டு எல்லோரு ஓபிஎஸ் அணிக்கு செல்லுங்கள் என்று கூறி வருகிறார்.
எப்படியாவது எங்கள் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்' என்று கூறியுள்ளார
தினகரனின் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறிய மு. க. ஸ்டாலின், 'தினகரன் தனது சுய விளம்பரத்திற்காக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை' என்று கூறியுள்ளார்..
Comments
Post a Comment