தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் குறித்து முடிவு செய்ய மார்ச் 23ல் உயர்நிலைக் கூட்டம் கூடுகிறது

புதுடெல்லி,

தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.குறிப்பாக காவிரி பாசன விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. பயிர்கள் காய்ந்து போனதை கண்டு மனம் உடைந்த விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரண நிதி, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடுப்பில் இலை தழைகளை கட்டிக்கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அவர்களை அரசியல் கட்சித்தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. 

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளநிலையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய வேளாண் மந்திரி ராதா மோகன்சிங் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ராதாமோகன் சிங் உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி உள்ளார். விவசாயக் கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார். 

கட்டாயப்படுத்தி கடனை வசூலிக்க கூடாது என வங்கிகளை அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டு உள்ளார் ராதா மோகன்சிங். வறட்சி நிவாரணம் தொடர்பாக உயர்மட்டக் குழுவை கூட்டவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்ய மார்ச் 23ல் உயர்நிலை கூட்டம் கூடுகிறது. கூட்டத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், ராதா மோகன்சிங் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர். 

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை