டிரைவிங் லைசென்சுக்கு ஆதார் எண்னை கட்டாயமாகிறது

புதுடில்லி : டிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போதும், புதுப்பிக்கும் போதும் ஆதார் எண்ணை கேட்டு வாங்க மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரே நபர் பல இடங்களில் லைசென்சு வாங்குவது, போக்குவரத்து குற்றங்களிலிருந்து தப்பிக்க போலி லைசென்ஸ் வாங்குவதை தடுக்க முடியும். இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டேட்டாபேஸ்:
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ் வழங்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும், வெவ்வேறு மாநிலங்களில்,வெவ்வேறு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூலம் பல லைசென்ஸ் வாங்குவதை தடுக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் அடையாளத்தை கண்டுபிடிக்க ஆதார் மட்டுமே போதுமான அடையாளமாக இருக்கும். ஆதார் இல்லாதவர்கள் வேறு சில சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அளிக்கும் சான்றுகளை அதிகாரிகள் பதிவு செய்ய தேவையான மாற்றங்ளை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கான தனியாக லைசென்ஸ் குறித்த டேட்டா பேஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் வேறு எங்காவது லைசென்ஸ் பெற்றுள்ளார்களா என்பது பற்றி அறிய அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகங்களும் இந்த டேட்டாபேசை பார்க்கும் வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தற்போது நாடு முழுவதும் 18 கோடி டிரைவிங் லைசென்சுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை