ஆன்லைனில் கலக்கும் கர்மா
கிரியேடிவ் கிரிமினல் தயாரித்து அர்விந்த்
ராமலிங்கம் இயக்கும் 'கர்மா' திரைப்படம் ஆன்லைனில் கலக்கி வருகிறது. சில
நாட்களுக்கு முன்னர் கர்மா திரைப்பட குழுவினர் கர்மாவில் நடிப்பதற்காக முன்னணி
நடிகர், நடிகைகளை facebook மூலமாக தேர்வு செய்வதாக அறிவித்து இருந்தனர். அறிவிப்பு
வெளியான சில நாட்களிலயே ஏராளமானோர் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து
விண்ணப்பித்திருந்தனர். கிட்ட தட்ட 22000த்திற்கும் மேலானோர்
விண்ணப்பித்திருந்தனர், அவற்றில் 200 பேர்களை shortlist
செய்திருக்கின்றனர்.
இது பற்றி மேலும் விவரிக்கையில் " இந்த facebook மூலமாக நாங்கள் நடிகர்/நடிகைகளை மட்டும் தான் விண்ணபிக்க அழைத்து இருந்தோம் அனால், எங்கள் படத்தின் தொழில்நுட்ப பிரிவில் பனி புரிய வாய்ப்பு வழங்குமாறு பல பேர் விண்ணப்பித்திருந்தனர். துணை இயக்குனராக, பாடல் ஆசிரியாராக வேண்டி விரும்பி பல பேர் விண்ணப்பிதிருன்தினர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்."
கர்மா திரைப்படத்தின் போஸ்டர் design பெரும்
வரவேற்ப்பை பெற்று கொண்டிருக்கிறது. இப்படம் மார்ச் மாதம் துவங்கும் என
அறிவிக்கபட்டிருகிறது.
Comments
Post a Comment