அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு திருத்தி அமைப்பு: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஜூன்.24-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது. குழுத் தலைவர்:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
குழு உறுப்பினர்கள்:- அவைத்தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைப்பு செயலாளர் கால்நடைத் துறை அமைச்சர் சொ.கருப்பசாமி, தேனி மாவட்டம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான், சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.( தினத் தந்தி)
Comments
Post a Comment