இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் 2 நாளில் விடுதலை
சென்னை, ஜூன்.24-
இலங்கை கடற்படையினரால கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட பிரதமர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இது மட்டுமல்லாமல், மத்திய அரசிடம் இதுகுறித்து தொடர் நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலாளரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் மற்றும் ஏனைய மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது எண்ணத்தை வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் இன்னும் 2 நாட்களில் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப பட்டுள்ளது.
Comments
Post a Comment