டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருவர் பலி
மதுரை: மதுரை அருள்தாஸ் புரத்தில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருவர் பலியாயினர். இது பற்றிய விபரம் வருமாறு: திருச்சி திருவாணைக்காவலை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மகன் மணிகண்டன். கோவிந்தம்மாளும், மணிகண்டனும் மதுரை அருள்தாஸ் புரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். தத்தனேரி மெயின்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டம் முன்பாக மினி லாரி ஒன்றில் இருந்து குடிதண்ணீரை இறக்கும் பணியில் அருள்தாஸ் புரத்தை சேர்ந்த அந்தோணி என்பவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது கோவிந்தம்மாளும், மணிகண்டனும் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியில் இருந்து டிப்பர் லாரி ஒன்றை ராமநாதபுரத்தை சேர்ந்த அனந்தகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக டிப்பர்லாரி தாய் மற்றும் மகன் மீது மோதியதோடு மட்டுமல்லாமல் மினிலாரி மீதும் மோதியது. இவ்விபத்தில் கோவிந்தம்மாள்,அந்தோணி ஆகியோர்சம்பவஇடத்திலேயே பலியாயினர்.பலத்தகாயமடைந்த மணிகண்டன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். (தின மலர் )
Comments
Post a Comment