விபத்து நடந்தது எப்படி?: பஸ் டிரைவர் பேட்டி

வேலூர், ஜுன்.8- சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு சென்று கொண்டு இருந்தது. வேலூர் மாவட்டம் ஓச்சேரியை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது திடீரென பஸ் லாரி மீது மோதியது. இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி 15 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. இதில் டீசல் டேங்கர் கசிந்து திடீரென்று தீப்பிடித்து பஸ் முழுவதும் தீ பரவியது. பஸ்சில் ஒருபக்கம் மட்டுமே கதவு இருந்ததாலும், பஸ் கீழே விழும்போது கதவு அடிபாகத்தில் மாட்டி கொண்டதால் பயணிகள் வெளியே வரமுடியவில்லை. சிலர் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தனர். அதுவும் முடியவில்லை. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 22 பயணிகள் தீயில் கருகி பலியானார்கள். டிரைவர், ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினர். முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது அந்த லாரி இடதுபக்கத்தில் இருந்து வலது பக்கம் திரும்பியதால் பஸ் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது என்று சரணடைந்த பஸ் டிரைவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை