உலகிற்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாக்கிஸ்தான் - இந்திய பிரதமர் மோடி ஆவேசம்
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோடில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஆசியாவில் நடக்கும் அனைத்து பயங்கரவாத சம்பவங்களுக்கும் அந்த நாடு தான் காரணம். பாதிக்கப்படும் நாடுகள் அனைத்தும் அந்த நாட்டை தான் குறை கூறுகின்றன. பயங்கரவாதிகள், அந்நாட்டு தெருக்களில் சுதந்திரமாக திரிகிறார்கள். ஒசாமா பின்லேடனும் அங்கு தான் பதுங்கி இருந்தான். அவனை போன்ற கொடூரமான பயங்கரவாதிகளை பாதுகாத்து வளர்கிறது. சமீபத்தில் நம் தேசத்தின் 18 வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிற்காக தியாகம் செய்துள்ளனர். நமது அண்டை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பயங்கரவாதிகளால் அவர்கள் உயிரிழந்துள்ளார்கள். யூரி தாக்குதல் நாடு முழுவதும் அந்நாட்டின் மீதான கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. நமது ராணுவத்தினரை எண்ணி நாம் பெருமை கொள்வோம். யூரி தாக்குதலுக்கு காரணமானவர்களை மறக்கமாட்டேன். கடந்த சில மாதங்களில் 110 பயங்கரவாதிகள் நம் வீரர்களால் சுட்ட...