பிரான்கோயிஸ் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கிரேக்க தூதர் கிரியகோஸ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலில் கிரேக்க தூதராக பணியாற்றியவர் கிரியகோஸ் அமிரிதிஸ் (59), இவர் பிரேசிலியாவில் உள்ள தூதரக அலுவலக குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டை கொண்டாட ரியோ டிஜெனிரோவுக்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் புறநகரான நோவா இருவாச்சு என்ற இடத்தில் தங்கியிருந்த போது திடீரென மாயமாகி விட்டார்.
அவரை பணத்துக்காக யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. எனவே அவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். ஆனால் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒரு பாலத்துக்கு கீழ் காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடல் கரிக்கட்டை யாக கிடந்தது. தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் கிரேக்க தூதர் கிரியகோஸ் அமிரிதிஸ் எரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து கொலையாளி யார்? ஏன் அவர் கொலை செய்யப்பட் டார் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப் பட்டது. அதில் அவரை மனைவி பிரான்கோயிஸ் (40) கொலை செய்தது தெரிய வந்தது.இவர் பிரேசிலை சேர்ந்தவர். இவர்களுக்கு 10 வயதில் மகள் இருக்கிறாள். இந்த நிலையில் பிரான் கோயிசுக்கும், பிரேசிலை சேர்ந்த போலீஸ் அதிகாரி செர்ஜியோ மொரைரா (29) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.
அதற்கு இடையூறு ஆக கிரியகோஸ் அமிரிதிஸ் இருந்தார். எனவே மனைவி பிரான்கோயிஸ் தனது காதலர் செர்ஜியோவுடன் இணைந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.
பிரேசிலியாவில் உள்ள வீட்டில் வைத்து தூதர் கிரியகோஸ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு காரில் எடுத்து சென்று உடல் எரிக்கப்பட்டுள்ளது. வீட்டில் படிந்திருந்த ரத்தக் கறையை வைத்து இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கினர்.
இந்த வழக்கில் கிரியகோ சின் மனைவி பிரான்கோயிஸ், கள்ளக்காதலன் செர் ஜியோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். செர் ஜியோவின் உறவினர் மகால் ஹாயஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் பிணத்தை அப்புறப் படுத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Comments
Post a Comment