அகிலேஷ் யாதவ் முலாயம் சிங்- தனித்தனியாக ஆலோசனை கூட்டம்

உத்தரபிரதேசத்தில் ஆளும்  சமாஜ்வாடி கட்சியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், சமாஜ்வாடியில்  அதிகாரத்தை கைப்பற்றுவதில் அக்கட்சி யின் நிறுவனரான முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், முதல்-மந்திரியுமான அகிலேஷ்    யாதவுக்கும் மோதல் உருவானது.

முலாயம்சிங்குக்கு ஆதர வாக அவரது தம்பியும், மாநில சமாஜ்வாடி தலைவரு மான சிவபால் யாதவ் வலது கரமாக இருந்து செயல்பட்டு வருகிறார். அகிலேஷ் யாத வுக்கு ஆதரவாக முலாயம் சிங்கின் சித்தப்பா மகனும் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான ராம் கோபால் யாதவ் இருக் கிறார். இதனால் சமாஜ்வாடி யில் மூத்த தலைவர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந் துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே நீருபூத்த நெருப்பாக இருந்து வந்த மோதல் முலாயம்சிங் யாதவ் 325 பேர் கொண்ட வேட் பாளர் பட்டியலை வெளி யிட்டதும் பூதாகரமாக வெடித்தது. அந்த வேட்பா ளர் பட்டியலை ஏற்காத அகிலேஷ் யாதவ் நேற்று முன்தினம் இரவு 235 தொகுதிகளுக்கான போட்டி வேட்பாளர்  பட்டியலை வெளியிட்டார்.இதனால் கடும் அதிருப்தி அடைந்த முலாயம்சிங் யாதவ் நேற்றிரவு முதல்-மந்திரி அகிலேஷ் யாதவை சமாஜ் வாடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்தார். பொதுச் செய லாளர் ராம் கோபால் யாத வும் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்துக்கு புதிய முதல்-மந்திரி தேர்ந்து எடுக்கப்படுவார் என்று முலாயம்சிங் யாதவ் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி நடவடிக்கை கட்சி யின் மூத்த தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. அகிலேஷ் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறுமாறு அவர்கள் சமரச முயற்சியில் ஈடுபட் டனர். ஆனால் முலாயம்சிங் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

இதன் காரணமாக சமாஜ் வாடி கட்சியில் உச்சக்கட்ட நெருக்கடியான நிலை ஏற் பட்டுள்ளது. முலாயம்சிங் கின் நடவடிக்கையை ஏற்க மறுத்துள்ள அகிலேசும், ராம்கோபால்   யாதவும் தாங்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதாக கூறியுள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக் கையாக அவர்கள் ஆதரவா ளர்களை ஒன்று திரட்டும் நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ள னர். இதனால் உத்தரபிர தேசத்தில்  பரபரப்பான அரசியல் சூழ்நிலை காணப் படுகிறது.

கட்சியில் தனக்கு இருக் கும் செல்வாக்கை காட்டு வதற்காக சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்துக்கு அகிலேஷ் அழைப்பு விடுத் தார். இதை அறிந்ததும் சுமார் 100 சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் நேற்றிரவே அகிலேஷ் வீட்டுக்கு சென்று தங்கள் ஆதரவைத் தெரி வித்தனர். இன்று காலை ஆயி ரக்கணக்கான சமாஜ்வாடி தொண்டர்கள் லக்னோவில் குவிந்தனர்.

அகிலேசின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முலாயம் சிங் யாதவும் போட்டி கூட்டத்தை கூட்டி உள்ளார். அதோடு அகிலேஷ் நடத்தும் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.முலாயம்சிங்கும், அகிலேசும் போட்டி கூட்டங்கள் நடத்துவதால் சமாஜ்வாடி கட்சி இரண்டாக பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முலாயம் சிங் வரும் 2017 பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களோடு ஆலோசனை நடத்தி வரும் நிலையில், எம்.எல்.ஏக்களுடன் அகிலேஷ் யாதவ் தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் 150க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எம்.எல்.சிக்கள் பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அகிலேஷ் யாதவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 

கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் முலாயம் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ, அகிலேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவு அவருக்கு இருப்பதாக தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை