Posts

Showing posts from December, 2016

ரஷ்ய விமானம் கடலில் விழுந்து விபத்து: 91 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான விமானம் கருங்கடலில் விழுந்ததில் 91 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரஷ்யாவின் சோச்சி என்ற நகரில் கிளம்பிய, டியு - 152 ரக விமானத்தில் 83 யபணிகளும், விமான படையை சேர்ந்த 8 வீரர்களும் இருந்துள்ளனர். இந்த விமானம் சிரியாவின் லடாகியா என்ற நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், ரேடார் கருவியில் உள்ள சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தை முழுமையாக தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் கருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தின் உதிரி பாகங்களும், உடல்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய மீடியாக்கள் கூறியுள்ளன.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்: சிகிச்சை பலன் இன்றி உயிர் பிரிந்தது

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். திடீர் மாரடைப்பு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 19-ந் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதாவின் இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழந்ததால் அவற்றை இயங்கச் செய்யும் வகையில் அவருக்கு ‘எக்மோ’ என்னும் அதிநவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது. உயிரை காப்பாற்ற முயற்சி இந்த நிலையில், நேற்று மதியம் 12.45 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சுப்...

ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் அப்பல்லோ மருத்துமனை புதிய தகவல்

Image
சென்னை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். •அதிகாலை 4 மணி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுகவினர் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.  •அதிகாலை 4.30 மணி - முதல்வர் ஜெயலலிதாவிற்கு இதய ரத்த நாள அடைப்பை போக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது •காலை 7 மணி - தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. - அப்பல்லோ வளாகத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டது . •காலை 7.30 மணியளவில் அதிமுக அமைச்சர்கள் அப்பல்லோவிற்கு விரைந்தனர் •காலை 8 மணி அஞ்சியோ சிகிச்சைக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்  •காலை 8.30 மணி மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் அப்பல்லோ விரைந்தனர் •காலை 9 மணி மருத்துவர் கில்லானி தலைமையில் 4 பேர் கொண்ட குழு நரங், தல்வார், பிரிகன், ட்ரிஹா ஆகியோர் சென்னை விரைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.ந...

ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக கவலைக்கிடம் - லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து  குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். பல்வேறு   பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித் தது. லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.  சிங்கப்பூரில் இருந்து   பிசியோதெரபி நிபுணர்களும் வந்து உடல் உறுப்புகள் அசைவுப் பயிற்சி அளித்தனர். இதன் காரணமாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் 90 சதவீதம் சுயமாக சுவாசிப்பதாக அறி விக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த மாதம் 19-ந்தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வேறு ஒரு  அறைக்கு மாற்றப்பட்டார். 72 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, எப்போது விரும்புகிறாரோ, அப்போது வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவ மனையின் தலைவர் டாக் டர் பிரதாப் ரெட்டி கூற...

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் தேற விரும்புகிறேன்: ராகுல் காந்தி

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அவரது உடல் நிலை மிக மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி  பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறுகையில்,”  நான் இந்த செய்தியை கேட்டேன். வெகு விரைவில் ஜெயலலிதா உடல் நலம் தேறுவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார். 

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடி யாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர். இதே போல வெளியூரில் இருந்த  எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும்படி உத்தரவிடப்பட்டது.இதைத்  தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்தனர். அவர் கள் அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களின் அவசர கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 11 மணிக்கு நடந்தது  இந்த கூட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த அவசர கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கூட்டத்தில்  சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம்,தேர்ந்து எடுக்கபட்டதாக தகவல் வெளியிடபட்டது. சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில்  இன்று 6 மாலை  மணிக்கு மீண்டும் நடைபெற உள்ளதாக தகவல்...