‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை
பூந்தமல்லி, போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் பரவியது. அவர் தற்கொலை செய்து கொண்டதால், போதை மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். போதை மறுவாழ்வு மையம் சென்னை நொளம்பூர், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி(வயது 35). இவருடைய மனைவி அம்மு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. குப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக அவரை, மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். சுமார் 1 மாதம் அங்கு சிகிச்சை பெற்று வந்த குப்புசாமி, கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர், தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் போதை மறுவாழ்வு மையத்தில் தான் சிகிச்சை பெறும்போது குடியை மறக்கும்படி அங்கு பணி புரியும் ஊழியர்கள் தன்னை பலமாக தாக்கினார்கள் என்று கூறி வந்ததாக தெரிகிறது. வாலிபர் தற்கொலை இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றுமுன்தினம் குப்புசா...