Posts

Showing posts from October, 2011

புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்கு பதிவு

திண்டிவனம், அக்.8- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார். அமைச்சர் மீது ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

சாம்பியன்ஸ் லீக் 2-வது அரை இறுதியில் மும்பை அணி வெற்றி

சென்னை, அக்.8- சாம்பியன்ஸ் லீக் 2-வது அரைஇறுதியில் சோமர்செட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பின்பு தொடர்ந்தாடிய சோமர்செட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் ஆட்டத்தில் அந்த அணி பெங்களூர் ராயல் சேலஞசர்சுடன் மோதுகிறது.

வேலூர் ஜெயிலில் முருகன்-நளினி சந்திப்பு

வேலூர், அக்.8- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் இருந்த முருகனை பெண்கள் தனிச்சிறைக்கு காலை 8-30 மணிக்கு அழைத்து சென்றனர். அங்கு காலை 8-30 மணி முதல் 9 மணி வரை நளினியும், முருகனும் சந்தித்து பேசினார்கள். பின்னர் முருகன் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.