உத்ரகாண்டை தொடர்ந்து தில்லி ஆட்சியையும் கவிழ்க்க சதி: கேஜரிவால் குற்றச்சாட்டு
புது தில்லி: உத்ரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தில்லி மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். தில்லி பேரவையில் கேஜரிவால் ஆற்றிய உரை விவரம்: உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் சாசனத்தை சாகடிப்பதாக உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து தில்லி, ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. ஒரு பெரிய தொழிலதிபர் மூலம் தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்கு பாஜக முயற்சித்ததாக உளவுத் துறை அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். அடுத்து வரும் இரு ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஒரு இடத்தைக்கூட தங்களால் வெல்ல முடியாது என பாஜகவுக்குத் தெரியும். அதனால்தான் குண்டர்களின் ராஜ்யத்தை அவிழ்த்துவிட்டுள்ளது. தில்லியில் முதலில் 21 எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்யவும், பின்னர் 23 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங...