Posts

Showing posts from August, 2014

அஞ்சான் விமர்சனம்

Image
இயக்குநர் லிங்குசாமியின் எழுத்து, இயக்கத்தில் 'சிங்கம்' சூர்யா நடித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் ''அஞ்சான்''. இது யாருக்கும் அஞ்சாத சிங்கமா.? சூர்யாவின் வெற்றி பட வரிசையில் சொக்கத் தங்கமா.? என்பதை இனி இங்கு உரசிப்பார்ப்போம்...! கதைப்படி, மும்பையில் தாதாவாக திகழ்ந்து, தகவலே இல்லாமல் போன தன் அண்ணன் சூர்யாவை தேடி கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இரயிலேறுகிறார் மாற்று திறனாளி தம்பி சூர்யா. மும்பை இரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கியதும், அந்தேரி ஏரியாவுக்கு அண்ணன் சூர்யாவைத் தேடி டாக்ஸி பிடிக்கும் தம்பி சூர்யாவை, வாங்க அந்தேரி என வரவேற்கும் டாக்ஸி டிரைவர் காமெடி சூரியை கூடவே கூட்டிக் கொண்டு வழக்கமான தமிழ் சினிமா பாணியில் அண்ணனைத் தேடாமல், தனி ஆளாக அண்ணன் சூர்யாவை தேடுகிறார் தம்பி சூர்யா. ஒரு கட்டத்தில் அண்ணன், தம்பி இருவர் அல்ல... இருவரும் ஒருவர்தான், ஒரே சூர்யா தான் எனும் உண்மை உலகுக்கும் (மும்பை நிழல் உலகுக்கும்...) உங்களுக்கும் (ரசிகர்களுக்கும்...) தெரிய வரும்போது 'அஞ்சான்' பதினாறடி பாஞ்சானாக ...

உங்களுடைய பிரதம சேவகன் நான்: டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மோடி உருக்க

புதுடில்லி: இந்த நாட்டின் பிரதம மந்திரியாக நான் உங்கள் முன் நிற்கவில்லை; உங்களுடைய பிரதம சேவகனாக நிற்கிறேன் என்று பிரதமர் நரேந்திரமோடி தமது சுதந்திர தின உரையில் உருக்கமாக கூறினார். சுதந்திர தினத்தை ஒட்டி இன்று காலை மகாத்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, காலை 07:30 மணி அளவில் செங்கோட்டை வந்தார். அங்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் அவர் செங்கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு: உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் நாட்டின் பிரதம சேவகன் என்ற முறையில் என் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; நான் நாட்டின் பிரதம மந்திரியாக உங்கள் முன் நிற்கவில்லை; உங்களுடைய பிரதம சேவகனாகவே நிற்கிறேன்; இந்த சுதந்திரத்திற்காக பல தலைமுறைகள் தங்களின் இளமையையும் வாழ்க்கையும் தியாகம் செய்துள்ளனர்; அவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்; இது போன்ற தினங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முன்னுதாரணம்; இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உந்துசக்தி; இந்த...

நீதித்துறையும், நிர்வாகமும் எந்தவித தலையீடுமின்றி செயல்பட வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

புதுடில்லி: நீதித்துறை, பார்லிமென்ட், நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு பரஸ்பர மரியாதை உள்ளதாகவும், மூன்று துறையும் எந்தவித தலையீடுமின்றி செயல்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களில் நீதிபதிகளை தேர்வு செய்ய, தற்போது, 'கொலிஜியம்' என, அழைக்கப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழு உள்ளது. இந்த முறையை மாற்றி, 'நீதித் துறை நியமனங்கள் ஆணையம்' ஒன்றை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.இது தொடர்பான மசோதாவும், அந்த ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவும், லோக்சபாவில், நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாக்கள், நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டில், தேசியக்கொடியை ஏற்றிய தலைமை நீதிபதிலோதா , பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் பார்லிமென்டில் உள்ளவர்களுக்கு பரஸ்பர மரியாதை அளித்து சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். மூன்று து...