கமல்ஹாசனுக்கு ஷாருக்கான், நாகார்ஜுன் உள்ளிட்டோர் ஆதரவு
மும்பை விஸ்வரூபம் பட பிரச்சினையில் கமல்ஹாசனுக்கு ஷாருக்கான், நாகார்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அவருடைய நீண்ட கால நண்பரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது அவருக்கு பல்வேறு நடிகர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஷாருக்கான் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்:– இதுபோன்ற பிரச்சினைகளை நாங்களும் சந்தித்தோம். சுருக்கமாக கூறினால் ஒரு படத்துக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்து விட்டால், குறிப்பிட்ட படம் நாடு முழுவதும் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றது என்பதே அர்த்தம்.கமல்ஹாசன் சீனியர் கலைஞர். அவர் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். விஸ்வரூபம் படத்தின் காட்சி அமைப்புகளில் என்னுடைய ரெட் சில்லிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. நாகார்ஜுன் நடிகர் நாகார்ஜுன்: கமல்ஜியை நான் நீண்ட காலமாக அறிவேன். அவருடைய தீவிர ரசிகன் நான். இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த நடிகர்களில், அவரும் ஒருவர். அப்படிப்பட்டவர், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவார...